மட்டக்களப்பில் அதிகரிக்கும் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை!

#SriLanka #Batticaloa
Mayoorikka
2 months ago
மட்டக்களப்பில் அதிகரிக்கும் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழுநோய் பரவுகின்ற வீதத்தை குறைக்கும் வகையில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 சுகாதார அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் இதனை கட்டுப்படுத்த தொடர்ச்சியான வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 இலங்கையில் தொழுநோய் அதிகளவில் பரவும் இரண்டாவது மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகின்றமையால் பொதுமக்களுக்கு இந்நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்றிட்டங்கள் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிமனை அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 கல்லடி பாலத்திலிருந்து ஆரம்பமான விழிப்புணர்வு பேரணி நகரின் பிரதான வீதிகள் ஊடாக மட்டக்களப்பு நகரை சென்று பின்னர் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையை வந்தடைந்தது.

 மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலக பணிப்பாளர் வைத்தியர் சு.முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்ஜயன் வைத்தியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், தாதியர் பாடசாலை மாணவிகள் எனபலரும் கலந்துகொண்டிருந்தனர். இவ்விழிப்புணர்வு பேரணியில் தொழு நோயைத் தடுக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் ஏந்திச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1740549479.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!