பிரான்சில் ரஷ்ய தூதரகத்தின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்

#France #Attack #Embassy
Prasu
4 months ago
பிரான்சில் ரஷ்ய தூதரகத்தின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்

பிரான்சின் மார்சேய் நகரத்தில் உள்ள ரஷ்ய துணை தூதரகத்தின் இனந்தெரியாதவர்கள் பெட்ரோல் குண்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது துணைதூதரக கட்டிடத்தின் மீது இரண்டு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாக பிரான்ஸ்பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அதேசமயம் மூன்றாவது பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை என ரஸ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சேதங்கள் அல்லது காயங்கள் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் அந்த பகுதியை சுற்றிவளைத்து போக்குவரத்தை தடைசெய்துள்ள பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் பயங்கரவாத தாக்குதல் போல தோன்றுவதாக தெரிவித்துள்ள ரஸ்யா முழுமையான விசாரணையை கோரியுள்ளது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1740469263.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!