பஹ்ரைனில் சுற்றுலா விசாவை வேலை விசாவாக மாற்ற முடியாது - உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!

#SriLanka #work #Visa
Dhushanthini K
2 months ago
பஹ்ரைனில்  சுற்றுலா விசாவை வேலை விசாவாக மாற்ற முடியாது - உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!

பஹ்ரைனில் ஸ்பான்சர் இல்லாமல் சுற்றுலா விசாவை வேலை விசாவாக மாற்ற முடியாது என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 

பஹ்ரைனில் உள்ள இலங்கை தூதரகம் வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி உள்துறை அமைச்சகம் இதனை அறிவித்துள்ளது. 

1965 ஆம் ஆண்டு பஹ்ரைனின் குடிவரவு மற்றும் குடியேற்றச் சட்டத்தின் திருத்தங்களின் கீழ், எந்த சூழ்நிலையிலும் ஒரு வெளிநாட்டவர் பஹ்ரைன் நுழைவு விசாவை வேலைவாய்ப்பு அல்லது குடியிருப்பு அனுமதிப்பத்திரமாக மாற்ற அனுமதிக்கப்படமாட்டார் என்ற விதி உள்ளது. 

இருப்பினும், சுற்றுலா விசாவை ஸ்பான்சருடன் பணி விசாவாக மாற்ற அனுமதிக்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன, அதன்படி, முன்னர் வசூலிக்கப்பட்ட 60 பஹ்ரைன் தினார் கட்டணம் 250 தினார்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சூழ்நிலையில் பஹ்ரைனில் ஏராளமான மக்கள் வேலைவாய்ப்பு குறித்த பொய்யான வாக்குறுதிகளின் கீழ் சுற்றுலா விசாக்களைப் பயன்படுத்துவதை தூதரகம் கவனித்துள்ளது. இதனைத் தொடர்ந்தே மேற்படி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1740468254.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!