கலகொட அத்தே ஞானசார தேரர் பிணையில் விடுதலை!
#SriLanka
#Court Order
#Bail
Dhushanthini K
2 months ago

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக 9 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த உத்தரவு இன்று (25.02) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளதால், தன்னை பிணையில் விடுவிக்கக் கோரி, ஞானசார தேரர் தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்




