புதுக்குடியிருப்பில் குரங்கால் ஏற்பட்ட விபத்து : 03 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு!

புதுக்குடியிருப்பு - ஒட்டுச்சுட்டான் வீதியில் மரணச்சடங்கில் கலந்துவிட்டு மீண்டும் வீடு திரும்பிய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் ஒட்டிசுட்டான் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான அகிலன் தனுஷியா என்ற 35 வயதான இளம் குடும்ப பெண்ணே உயிரிழந்தவராவார்.
கணவன், மனைவி மற்றும் அவர்களின் குழந்தை மூவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேலை குரங்கு ஒன்று குறுக்கே மோதியில் மோட்டார் சைக்கில் விபத்துக்குள்ளானது.
இதில் குறித்த பெண்ணின் தலையில் அடிப்பட்ட நிலையில் அவர் முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டார். இருப்பினும் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்




