தமிழ் சிங்கள மக்கள் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும்! அர்ச்சுனா

தையிட்டி விகாரையை இடிப்பது இனவாதத்தை கட்டியெழுப்பும் ஆகவே தான் அதை இடிக்க வேண்டாமென நான் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் தெரிவித்திருந்தேன் என யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இன்று (24) நாடாளுமன்றத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ் மற்றும் சிங்கள மக்கள் ஒன்றாக இணைந்த வாழ வேண்டும் என்றே விரும்புகின்றனர். எந்தவொரு கோவில் மற்றும் விகாரை இடிக்கப்பட்டாலும் அது கலவரத்தை தூண்டக்ககூடிய விடயமாக மாறும், சிலர் அதை உடைத்ததெறிய வேண்டும் என தெரிவித்துக்கொண்டிருக்கின்றார்கள்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தற்போதைய அரசின் வரவு செலவு திட்டம், வடக்கு மற்றும் கிழக்கிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி என்பன தொடர்பில் அவர் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்




