ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் ஆரம்பம்! இலங்கையில் இருந்து சென்ற அமைச்சர்கள்

#SriLanka #Geneva
Mayoorikka
2 months ago
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் ஆரம்பம்! இலங்கையில் இருந்து சென்ற அமைச்சர்கள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தலைவர் ஜூர்க் லோபர் தலைமையில் ஆரம்பமான கூட்டத்தொடரில் அந்த சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

 கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் உரையாற்றிய ஜூர்க் லோபர் தனிமனித அடிப்படை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன் சர்வதேச சட்டத்தையும் நடைமுறையையும் நினைவுபடுத்தியிருந்தார்.

- கடந்த 80 வருட காலமாக மனித உரிமைகளை நிலைநாட்டும் செயற்பாட்டை முன்னெடுத்து வருவதாகவும், உலகளாவிய ரீதியில் மனித உரிமைகளுக்கு எதிரான செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் தம்மாலான முயற்சிகளை செயற்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.

 இதேவேளை குறித்த கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்டக் குழு நேற்று ஜெனீவாவுக்கு பயணமானது. இந்தக் குழுவினர் எதிர்வரும் 28 ஆம் திகதிவரை மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளில் பங்குபற்றவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இதனிடையே, அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்ட குழுவினர் நட்பு நாடுகளுடனான பிரதிநிதிகளுடன் உயர்மட்ட கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கும் திட்டமிட்டுள்ளனர்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1740372869.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!