ஏற்றுமதியை அதிகரிக்க உதவுதல் திட்டம் குறித்து ஜப்பான் தூதுவருடன் விசேட கலந்துரையாடல்

இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் துணைத் தூதுவர் கமோஷிடா நவோகி மற்றும் இலங்கையின் ஜப்பானுக்கான ஏற்றுமதியை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு நடைபெற்ற பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டவர்களுக்கு இடையில் திங்கட்கிழமை (24) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன்போது, ஜப்பான் அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டு சர்வதேச வர்த்தக மையத்தால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன "இலங்கை ஜப்பானுக்கான ஏற்றுமதியை அதிகரிக்க உதவுதல்" குறித்து கலந்துரையாடப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் (EDB), இலங்கை வர்த்தக சம்மேளனம் (CCC) , ஜப்பான் வெளி வர்த்தக அமைப்பு (JETRO) , ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கலந்துரையாடலின் போது, இலங்கை ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஜப்பானிய பங்கேற்பாளர்களிடையே பல தகவல்கள் பகிரப்பட்டன. இதன்போது, இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு ஜப்பானின் பங்களிப்பு குறித்து எடுத்துக்காட்டப்பட்டது.
"இலங்கை ஜப்பானுக்கான ஏற்றுமதியை அதிகரிக்க உதவுதல்" என்ற திட்டத்தின் மூலம் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவு மேலும் வலுப்படுத்தப்படும் என நம்பப்படுகிறது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்




