மன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 32 பேர் கைது!
#SriLanka
#Mannar
#Court Order
Thamilini
9 months ago
மன்னார் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 32 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மாநிலம் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 32 மீனவர்கள் அவர்களின் அதிநவீன தொலைதொடர்பு சாதனங்கள் மற்றும் 5 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த 32 இந்திய மீனவர்களும் கடற்படையின் விசாரணைகளின் பின்னர் நேற்று மாலை மன்னார் மாவட்ட கடற்தொறொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கபட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த 32 மீனவர்களையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்
