1.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இலங்கை வந்த பெண் கைது!

#SriLanka #Arrest
Dhushanthini K
2 months ago
1.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இலங்கை வந்த பெண் கைது!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால், 1.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை கடத்த முயன்றபோது, ​​இலங்கைப் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டார். 

 கடவத்தை சூரியபலுவ பகுதியில் வசிக்கும் 27 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்தத. 

அவர் நேற்று (22) பிற்பகல் 03.30 மணிக்கு துபாயிலிருந்து ஃபிட்ஸ் ஏர் விமானம் 8D-824 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து  அவர் எடுத்துச் சென்ற சாமான்களில் 10,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் இருந்தன. அவரிடம் இருந்த 50 அட்டைப்பெட்டி சிகரெட்டுகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

 பயணி தற்போது பொலிஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை (25) நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1740362938.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!