இலங்கை - இந்தியா இடையிலான கப்பல் சேவை மீள ஆரம்பம்!

இந்தியா, இலங்கை இடையிலான கப்பல் சேவை மீண்டும் இன்று (22.02)தொடங்கவுள்ள்தாக கப்பலை இயக்கும் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதையடுத்து கப்பலில் பயணிக்க முன்பதிவு செய்த பயணிகள், நாகை பயணியர் முனையத்திற்கு அதிகாலை முதல் வரத்தொடங்கியுள்ளதாக செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
பயணிகளின் உடமைகள் மற்றும் பயண டிக்கெட்டை, இமிகிரேஷன் அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி வைத்தனர்.
பின்னர் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் கப்பலில் பயணிகள் ஏற அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நாகை துறைமுகத்தில் இருந்து மும்மத பிரார்த்தனையுடன் கப்பல் சேவையானது கொடியசைத்து தொடக்கிவைக்கப்பட்டது.
இதில் பயணம் செய்யும், பயணிகள் மகிழ்ச்சியுடன் நாகை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் இலங்கை காங்கேசன்துறைக்கு பயணத்தை மேற்கொண்டனர்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



