வெடுக்குநாறிமலையில் இம்முறை சிவராத்திரி பூஜைகள் இடம்பெறுமா? விபரம் கோரிய பொலிஸார்!

நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தினம் தொடர்பாக ஆலய பூசாரி முக்கியஸ்தர்கள் நெடுங்கேணி பொலிஸாரால் அழைக்கப்பட்டு விபரங்கள் கோரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள் தொல்பொருட்திணைக்களத்திற்கு கீழ் உள்ளதாக தெரிவித்து, பொதுமக்களின் வழிப்பாட்டு நடவடிக்கைகளுக்கு நீண்டகாலமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதனை மீறி பூஜை வழிப்பாடுகளை முன்னெடுக்கும்போது பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவங்கள் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளன.
இந்நிலையில் வரும் 26 ஆம் திகதி சிவாராத்திரி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் அப்பகுதியில் பூஜை நடவடிக்கைகள் தொடர்பாக பொலிஸாரால் விபரங்கள் கோரப்பட்டுள்ளன.
இது தொடர்பாக ஆலயத்தின் பூசகர் மதிமுகராசாவிடம் கேட்ட போது இம்முறை சிவராத்திரி விரத பூஜைகளை காலை முதல் மாலை 6 மணிவரை முன்னெடுப்பதற்கு நாம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.
6மணியின் பின்னர் பிறிதொரு பகுதியில் சிவனுக்கான இரவு அனுஸ்டானங்களை செய்வதற்கும் ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சிவராத்திரி தினம் வெடுக்குநாறிமலையில் சிறப்பாக இடம்பெறும் என அவர் தெரிவித்தார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



