யாத்திரைக்கு சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் சோகம் : ஒருவர் பலி!
#SriLanka
#Accident
#fire
Dhushanthini K
4 months ago

உடமலுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜேதவனராமயவிற்கு அருகிலுள்ள முதியோர் இல்லம் அருகே இன்று (22.02) அதிகாலை யாத்ரீகர் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த சுமார் 55 வயதுடையவராவார்.
அனுராதபுரம் நகர சபை தீயணைப்புத் துறை, அனுராதபுரம் காவல்துறை மற்றும் உடமலுவ காவல்துறை இணைந்து தீயை அணைத்துள்ளனர்.
உடமலுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



