கனடா-மிசிசாகாவில் நடந்த வாகன விபத்தில் 20 வயது இளம்பெண் மரணம்
#Death
#Canada
#Accident
#Women
#Road
Prasu
2 months ago

மிசிசாகாவில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவத்தில் படுகாயம் அடைந்த 20 வயது இளம்பெண் உயிரிழந்ததாக பீல் பிராந்திய போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஒரு பெண் சாலையை கடக்கும்போது, வேகமாக வந்த SUV வாகனம் ஒன்றினால் மோதப்பட்டு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தை மேற்கோண்ட நபர் வாகனத்துடன் தப்பிச் சென்றுள்ளார்.
விபத்துக்குள்ளான இளம்பெண் படுகாயங்களுடன் அவசர மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என போலீசார் உறுதிப்படுத்தினர்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



