அரச மருத்துவமனைகளில் காத்திருப்போர் பட்டியலை குறைக்க சிறப்பு குழு நியமனம்!
#SriLanka
#Hospital
Thamilini
9 months ago
அரச மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பில் ஆராய குழுவொன்றை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த குழு நிலமைகளை ஆராய்ந்து ஒரு மாதத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என ஜனாதிபதி செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமநாயக்க தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலாளருக்கும் சுகாதாரத் துறைகளின் தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்