கடவத்த சந்தியில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மீது துப்பாக்கிச்சூடு : இருவர் பலி!

#SriLanka #GunShoot
Thamilini
9 months ago
கடவத்த சந்தியில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மீது துப்பாக்கிச்சூடு : இருவர் பலி!

மித்தெனிய பொலிஸ் பிரிவின் கடவத்த சந்தியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

 துப்பாக்கிச் சூட்டில் தந்தையும் அவரது 6 வயது மகளும் உயிரிழந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். 

 மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் மீது அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதில் சைக்கிளில் சென்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின் இருக்கையில் பயணித்த மகள், மற்றும் மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மகளும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு T-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

பொதுமக்களுடைய நன்மை கருதி 
லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை