கனடாவில் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கிய விமானம் : இருவரின் நிலை கவலைக்கிடம்!
#SriLanka
#Flight
#Canada
#Accident
Thamilini
9 months ago
கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியுள்ளது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 17 பயணிகள் காயமடைந்தனர், அவர்களில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
விபத்து நடந்த நேரத்தில் விமானத்தில் 76 பயணிகளும் நான்கு பணியாளர்களும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் கனடாவின் மினியாபோலிஸ் விமான நிலையத்திலிருந்து டொராண்டோ பியர்சன் விமான நிலையத்திற்கு பயணித்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்