ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு!
#SriLanka
#weather
#Rain
Thamilini
9 months ago
ஊவா மாகாணத்திலும், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் மீதமுள்ள பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் அதிகாலை நேரங்களில் குளிர்கால வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் பதுளை மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனி நிலவும்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்