சுவிஸ் பாடசாலையில் ஏற்பட்ட வெடிப்பு - 24 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
#School
#Student
#Switzerland
#Hospital
#Blast
Prasu
1 month ago

சுவிட்சர்லாந்தில் Chur, இல் உள்ள Giacometti பாடசாலையில் பட்டாசு வெடித்ததில் மாணவர்கள் பலர் காயம் அடைந்ததாக சுவிஸ்தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் பாடசாலையின் படிக்கட்டுகளில் பாரிய வெடிப்புச் சத்தம் கேட்டது.
சம்பவத்தையடுத்து பொலிசார் விரைந்து சென்று தேடுதல்களில் ஈடுபட்டனர். பட்டாசு விபத்தில் 13 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்கள் பலர் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்த 24 மாணவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக Graubünden கன்டோனல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



