சர்வதேச மாநாட்டிற்காக பிரான்ஸ் சென்ற கனடிய பிரதமர்
#PrimeMinister
#Canada
#Summit
Prasu
11 months ago
கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிரான்சிக்கு விஜயம் செய்துள்ளார். செயற்கை நுண்ணறிவு குறித்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் பிரான்சிற்கு விஜயம் செய்துள்ளார்.
சர்வதேச செயற்கை நுண்ணறிவு குறித்த மாநாடு பிரான்சின் பாரிஸ் நகரில் நடைபெறுகின்றது.
அமெரிக்க அரசாங்கம் கனடாவின் உலோக உற்பத்திகள் மீது 25 வீத வரி விதிக்கப்படக்கூடிய சூழ்நிலையில் இந்த விஜயம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவின் தாக்கங்கள் தொடர்பிலும் அதன் பயன்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட உள்ளது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்