ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அனுர’!
#SriLanka
#AnuraKumaraDissanayake
Thamilini
9 months ago
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (10) ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார்.
அந்நாட்டின் ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்ள உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜனாதிபதி இன்று முதல் 13 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விஜயம் செய்ய உள்ளார்.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க 2025 உலக அரசாங்க உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார். மேலும் உச்சிமாநாட்டில் உரையாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்