கனடாவில் பிரபல இந்திய பாடகரின் வீடு மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல்

கனடாவில், பிரபல இந்திய பாடகர் ஒருவரின் இல்லத்தைக் குறிவைத்து இனந்தெரியாதவர்களினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல பஞ்சாபி பாடகரான பிரேம் தில்லானின் குடியிருப்பைக் குறி வைத்தே குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், ஜெய்பால் புல்லர் எனும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் கும்பலொன்று இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது 2022 ஆம் ஆண்டு பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பாடகர் சித்து மூஸ்வாலாவின் பெயரையும் அந்தக் வெளியிட்ட ஒரு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், சிறையில் அடைக்கப்பட்ட ஜக்கு பகவான்பூரியா என்பவர் தொடர்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இசைத்துறையில் பஞ்சாப் பாடகர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



