உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்!

#SriLanka #Local council
Mayoorikka
10 months ago
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை இவ்வருடம் ஏப்ரலில் நடத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 இதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் இரண்டாவது அல்லது நான்காவது வாரத்தில் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான உள்ளூராட்சி அதிகார சபைகள் தேர்தல் சட்டத்தில் திருத்தச் சட்டமூலத்தை அனைத்துக் கட்சிகளும் இணைந்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

 இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தல் (திருத்த) சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனை மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நிறைவடைந்துள்ளது. இதுவரை பகிரங்கமாக வெளியிடப்படாத இந்த உத்தரவு நாடாளுமன்ற சபாநாயகருக்கு நேரடியாகத் தெரிவிக்கப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. 2018ஆ ம் ஆண்டு முதல் இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறவில்லை.

 2022 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த தேர்தல் பொருளாதார நெருக்கடி காரணமாக 2023 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது, நீதிமன்றத் தீர்ப்புகளால் தேர்தல் மேலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அண்மையில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் இந்த வருடம் ஏப்ரல் மாதத்திற்கு முன்னதாக நடத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை