யாழில் பரிதாபமாக உயிரிழந்த நான்கு வயது சிறுமி!
#SriLanka
Mayoorikka
10 months ago
யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக 04 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். புங்குதீவு 06ஆம் வட்டாரத்தை சேர்ந்த சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த சில தினங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமியை, பெற்றோர் கொக்குவில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை சிறுமிக்கு கடும் சுகவீனம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பெற்றோர் புங்குடுதீவு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளைஇ சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.