யாழில் பிறந்து ஒரு நாளேயான சிசுவின் உடலம் கிணற்றுக்குள் இருந்து மீட்பு!
#SriLanka
#Jaffna
Mayoorikka
10 months ago
யாழ்ப்பாணம் கைதடிப் பகுதியில் தோட்டக்கிணற்றினுள் இருந்து சிசுவின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
கைதடி மோக்யாவத்தைப் பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றினுள் இருந்தே இன்று காலை குறித்த சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
காலை தோட்டத்திற்கு சென்ற விவசாயிகளினால் சிசு கிணற்றினுள் வீசப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டிருந்த நிலையில் உடனடியாக சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சிசுவை மீட்ட நிலையில், பிறந்து ஒருநாளே ஆன சிசுவின் உடலம் என்பது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்கள் நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இதனை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்