சீரற்ற வானிலையால் 15 மாவட்டங்கள் பாதிப்பு : இருவர் பலி!

#SriLanka #weather #Rain
Thamilini
10 months ago
சீரற்ற வானிலையால் 15 மாவட்டங்கள் பாதிப்பு : இருவர் பலி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 15 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 6,785 குடும்பங்களைச் சேர்ந்த 20,300 பேர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. 

 இந்த பேரழிவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பல்வேறு விபத்துகளில் 3 பேர் காயமடைந்துள்ளனர். 

 இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக நேற்று இரவு மூடப்பட்ட கண்டி - மஹியங்கனை வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

 மண்சரிவு மற்றும் பாறைகள் சரியும் அபாயம் காரணமாக, கண்டியில் உள்ள தன்னேகும்புர சந்தியிலிருந்தும், ஹசலகாவில் உள்ள பாலம் சந்தியிலிருந்தும் கண்டி-மஹியங்கனை பிரதான சாலையை நேற்று மாலை 6 மணி முதல் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

 இதற்கிடையில், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வலப்பனை பிரதேச செயலகப் பிரிவின் மலபட்டாவ பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. 

 இதன் காரணமாக வலப்பனையிலிருந்து ஹகுரான்கெத்த வழியாக கண்டி செல்லும் பாதை மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.


பொதுமக்கள் நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இதனை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை