மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்க தயார் - நாமல்!

அரசாங்கம் கோரும் எந்த நேரத்திலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், சம்பந்தப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம் அரசியலமைப்பு ரீதியாக தன்னுடையது என்றும், இது தொடர்பாக எழுத்துப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டால் அதை அரசாங்கத்திடம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
“அந்த வீடு அரசியலமைப்பின் மூலம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டது. இது பாதுகாப்பை மையமாகக் கொண்ட ஒரு பிரச்சினை. இது நாங்கள் கேட்ட வீடு அல்ல, ஆனால் அரசியலமைப்பின் படி ஒரு முன்னாள் ஜனாதிபதி பெறும் வீடு." எனத் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இதனை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



