மாத்தறையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து : 61 பேர் படுகாயம்!
#SriLanka
#Accident
Thamilini
10 months ago
மாத்தறை-தங்கல்ல பிரதான வீதியில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் 61 பேர் காயமடைந்துள்ளதாக மாத்தறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விக்கும் கினிகே கூறுகிறார்.
இந்த விபத்தில் ஒரு வெளிநாட்டவரும் மூன்று இளம் குழந்தைகளும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எம்பிலிப்பிட்டியவிலிருந்து மாத்தறைக்கும், மாத்தறையிலிருந்து தங்காலைக்கும் பயணித்த இரண்டு பேருந்துகளே இந்த விபத்தில் சிக்கின.
விபத்து குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், விபத்துக்குப் பிறகு தடைப்பட்ட சாலை தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்