கல்கிசை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழப்பு

#SriLanka #Death #Hospital #GunShoot
Prasu
10 months ago
கல்கிசை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழப்பு

கல்கிஸை, சிறிபால மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் கல்கிஸை - படோவிட 2ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சவிந்து தரிந்து என்பவராவார். களுபோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கிஸை, சிறிபால மாவத்தையில் மேற்படி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றிருந்தது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மற்றொரு நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மற்றைய சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை