மலையகத்தின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

#SriLanka #Warning #Land_Slide
Thamilini
10 months ago
மலையகத்தின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

மண்சரிவுகள் தொடர்பான முன்கூட்டியே எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

 இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (19) காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை அமலில் இருக்கும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 

 அதன்படி, கண்டி மாவட்டத்தில் உடுதும்பர, மாத்தளை மாவட்டத்தில் யடவத்த, உக்குவெல, ரத்தோட்டை மற்றும் வில்கமுவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளன. 

 பதுளை மாவட்டத்தில் பதுளை, பசறை, ஹாலிஎல, கண்டி மாவட்டத்தில் மெததும்பர, பததும்பர, டோலுவ,  குருநாகல் மாவட்டத்தில் ரிதிகம,  லக்கல பல்லேகம, மாத்தளை மாவட்டத்தில் அம்பன்கங்கா கோரளை, பல்லேபொல, மாத்தளை மற்றும் நாவுல ஆகிய பிரிவுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை