மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக துப்பாக்கி சூடு - இருவர் படுகொலை, இருவர் காயம்
#SriLanka
#Mannar
#GunShoot
Thamilini
10 months ago
மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இன்றையதினம் வியாழக்கிழமை துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மன்னார் நீதி மன்றத்திற்கு வழக்கு விசாரணை ஒன்றுக்காக வருகை தந்தவர்கள் மீதே மேற்படி மோட்டார் சைக்கிளில் வருகை தந்த நபர்களால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கிலக்கான இருவர் உயிரழந்துள்ள நிலையில், இருவர் ஆபத்தான நிலையில் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்

துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்ட நபர்கள் தப்பி சென்ற நிலையில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.