கனேடியத் தூதரை சந்தித்த தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
#SriLanka
Mayoorikka
10 months ago
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் சண்முகம் குகதாசன் ஆகியோர் இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ்ஸை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
அண்மையில் கனடாவுக்குப் பயணமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும், அங்கு கனேடியப் பிரதி அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்துக் கலந்துரையாடியிருந்த நிலையில், குறித்த சந்திப்புகள் தொடர்பிலும், சமகால அரசியல் நிலைவரம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலின் போது, தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவினருக்கும், கனேடியத் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பொன்றை ஒழுங்கமைக்குமாறு கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிறீதரன், தூதுவரிடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்திகளை அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்