நாளை மறுதினம் வரை பண்டிகை கால விசேட சோதனை திட்டம்
#SriLanka
Mayoorikka
10 months ago
பண்டிகை காலத்தில் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சோதனை வேலைத்திட்டம் நாளை மறுதினம் வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்போது, மொத்த மற்றும் சில்லறை அரிசி விற்பனை நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டு, அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அத்துடன், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள், குறித்த காலப்பகுதியில் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட வணிக தளங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான மேலதிக தகவல்களை அறிவதற்கு இந்த இணைப்பினை கிளிக் செய்யவும்