ஹஜ் யாத்திரைக்காக 3,500 இலங்கையர்களை ஈர்ப்பது தொடர்பில் ஒப்பந்தம்!
#SriLanka
#SaudiArabia
#Hajj
Thamilini
10 months ago
இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்காக 3,500 இலங்கையர்களை வரவேற்கும் ஹஜ் ஒப்பந்தம் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம் சவுதி அரேபியாவின் ஹஜ் துணை அமைச்சர் அப்துல்ஃபதா பின் சுலைமான் மஷாத் மற்றும் புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் டாக்டர் ஹினிதுமா சுனில் ஆகியோருக்கு இடையே கையெழுத்தானது.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஹஜ் யாத்திரை பருவம் தொடர்பான வசதிகள் குறித்தும், யாத்ரீகர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் இருதரப்பு விவாதங்களும் நடத்தப்பட்டன.
இந்நிகழ்வில் தேசிய ஒருங்கிணைப்பு துணை அமைச்சர் ஷேக் முனீர் முலாஃபர், ரியாத்துக்கான இலங்கை தூதர் அமீர் அஜ்வத், முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார விவகாரத் துறையின் இயக்குநர் எம். எஸ். எம். நவாஸ் மற்றும் ஜெட்டாவில் உள்ள இலங்கையின் பதில் தூதர் மஹ்ஃபுசா லாபீர் உள்ளிட்ட குழுவினர்.