தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51ஆவது நினைவேந்தல்!

#SriLanka
Mayoorikka
10 months ago
தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51ஆவது நினைவேந்தல்!

நான்காவது அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51ஆவது நினைவுதினம் இன்று யாழில் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது.

 யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நான்காவது அனைத்துலக தமிழாராய்ச்சி படுகொலை நினைவு தூபிக்கு முன்பாக இன்று காலை 10 மணிக்கு அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

images/content-image/2024/1736494427.jpg

 யாழ்ப்பாணத்தில் 1974ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதிதினமான ஜனவரி 10ஆம் திகதி, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

images/content-image/2024/1736494439.jpg

 உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடாத்த விடாமல் அப்போதைய சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசு, காவல் துறையை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது. இவ் துயர சம்பவம் தமிழர் வாழ்நாளில் நீங்காத வடுக்களாக பதியப்பட்டது

images/content-imagebanner/2024/1736494455.jpg

images/content-imagebanner/2024/1736494471.jpg

மேலதிக செய்திகளை அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை