ரவா பலகாரம் - செய்முறை!
#SriLanka
Thamilini
10 months ago
தேவையான பொருட்கள்:
ரவை -1கப்
உப்பு - தேவைக்கேற்ப
தனி மிளகாய்த்தூள் - 1 மே.கரண்டி
பட்டர் - 1 மே.கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை
● ரவையை கிரைண்டரில் போட்டு மாவாக அரைத்து,அரித்து எடுக்கவும். ● இந்த மாவுடன் பட்டர், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து ரொட்டி பதத்திற்கு குழைக்கவும்.
இந்தக் கலவையை எண்ணெய் பரத்தி ரொட்டி போல தட்டி டைமண்ட் வடிவில் வெட்டி எடுக்கவும்.
எண்ணெயை கொதிக்க வைத்து பொரித்து பரிமாறவும்.
••• ஆறியதும் காற்றுப்புகாத பாத்திரத்தில் போட்டு வைத்தால் ஒரு மாதத்திற்கும் கூடுதலாக வைத்துப் பாவிக்கலாம்.