மட்டக்களப்பில் கால்வாயில் தவறி விழுந்து குழந்தை பலி!
#SriLanka
#Batticaloa
Thamilini
11 months ago
கால்வாயில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது. இச்சம்பவம் நேற்று (04) மட்டக்களப்பு வள்ளவெளி பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
கால்வாய் அருகே வீட்டில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்த குழந்தை திடீரென தண்ணீரில் விழுந்தது.
கால்வாயில் தவறி விழுந்த குழந்தையை மீட்டு உடனடியாக பழுகம்மம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், வைத்தியசாலையில் அனுமதிக்கும் முன்னரே குழந்தை உயிரிழந்துள்ளது.
குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.