மாத்தறை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் : கைவிடப்பட்ட நிலையில் மோட்டார் வண்டி மீட்பு!
#SriLanka
#GunShoot
Thamilini
11 months ago
மாத்தறை, வெலிகமவில் இன்று (04) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் என சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் வெலிகம மூனமல்பே பகுதியில் உள்ள ஏரியில் வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நபர்கள் ரிவோல்வர் மற்றும் T-56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.