இறக்குமதியின் பின் அரிசியின் விலை குறையுமா? : வெளியான அறிவிப்பு!
#SriLanka
#rice
Thamilini
11 months ago
அரிசியின் அதிகபட்ச சில்லறை விலையை ரத்து செய்யலாமா வேண்டாமா என்பதை, இறக்குமதிக்கு ஏற்ப விலை ஸ்திரப்படுத்தப்பட்ட பின்னரே நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) முடிவு செய்யும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஜனவரி 10 ஆம் திகதி வரை வெள்ளை மற்றும் நாட்டு அரிசி வகைகள் உட்பட 90,000 தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக சிஏஏ அதிகாரி ஹேமந்த சமரகோன் தெரிவித்தார்.
அரிசி இறக்குமதியின் பின்னர் அதிகபட்ச சில்லறை விலை குறையுமா என வினவியதற்கு, இதுவரையில் கலந்துரையாடல் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், நிலைமையை ஆராய்ந்த பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.