வெங்காயத்தை இறக்குமதி செய்ய தீர்மானம்: அரிசித் தட்டுப்பாட்டுக்கு தீர்வு

#SriLanka
Mayoorikka
11 months ago
வெங்காயத்தை இறக்குமதி செய்ய தீர்மானம்:  அரிசித்  தட்டுப்பாட்டுக்கு தீர்வு

வெங்காயத்தை இறக்குமதி செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்தின் படி 20,000 மெற்றிக் டன் வெங்காயத்தை முதற்கட்டமாக இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை அரச வர்த்தக கூட்டத்தாபனம் தெரிவித்துள்ளது. 

 ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அதன் தலைவர் ரவீந்திர பெர்ணான்டோ இதனை குறிப்பிட்டுள்ளார். வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான விலைமனு கோரல் நாளையுடன் நிறைவடைகிறது. 

 தற்போது, சந்தையில் வெங்காயத்துக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ள காரணத்தால், இந்த மாதம் 31ஆம் திகதிக்குள் 30 ஆயிரம் மெற்றிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அண்மையில் தீர்மானித்திருந்தது. 

 இதேவேளை, சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு எதிர்வரும் வாரத்துக்குள் தீர்வு எட்டப்படும் என அரச வாணிப கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவீந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

 இந்தியாவில் இருந்து முதற்கட்டமாக 10, 400 மெற்றிக் தொன் அரிசி கொள்வனவானது எதிர்வரும் வாரம் இறக்குமதி செய்யப்படும் என ரவீந்திர பெர்னாண்டோ கூறியுள்ளார். மேலும், சந்தையில் நிலவும் அரிசி தட்டப்பாட்டுக்கு தீர்வாக இந்தியாவில் இருந்து 70 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 இதேவேளை, கடந்த சில நாட்களாக சந்தையில் வீழ்ச்சியடைந்திருந்த முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை