அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாறி வரும் கனடா - டொனால்ட் ட்ரம்ப்
#Canada
#America
#State
Prasu
10 months ago

கனடா தொடர்பில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கனடா தற்பொழுது அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாறிக்கொண்டு வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் 51 வது மாநிலமாக கனடாவை மாற்றுவது சிறந்த யோசனை என அவர் தெரிவித்துள்ளார்.
கனடாவிற்கு எதற்கு மானியங்கள் வழங்கப்பட வேண்டும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அனேகமான கனடியர்கள் அமெரிக்காவின் 51 வது மாநிலமாக கனடா மாறுவதனை விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.



