அமெரிக்க டொலருக்கு நிகரான கனடிய டொலரின் பெறுமதி வீழ்ச்சி
#Canada
#Dollar
#Tamilnews
Prasu
10 months ago

அமெரிக்க டொலருக்கு நிகரான கனடிய டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக கனடிய டொலர் ஒன்றின் பெறுமதி 0.70 அமெரிக்க டொலரை விடவும் குறைந்துள்ளது.
கோவிட் பெருந்தொற்று நிலவிய காலத்தில் இவ்வாறு டொலரின் பெறுமதி வீழ்ச்சியை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிதி அமைச்சராக கடமையாற்றிய கிறிஸ்டியா ப்ரீலாண்ட் பதவி விலகியுள்ள நிலையில் இவ்வாறு டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



