தேங்காய் நெருக்கடிக்கு தீர்வு : தென்னை விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க நடவடிக்கை!
#SriLanka
#Coconut
Thamilini
11 months ago
தற்போதைய தேங்காய் நெருக்கடிக்கு தீர்வாக தென்னை விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் சமந்த வித்யாரத்த தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் 55,000 மெற்றிக் தொன் உரத்தில் 27,500 மெற்றிக் தொன் தென்னை விவசாயிகளுக்கு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “எங்கள் அமைச்சின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் தென்னந்தோப்புகளில் 5 வருடங்களாக உரம் இடப்படவில்லை.இதன் மூலம் விளைச்சல் குறைவு என்று அர்த்தம்.
சாமான்ய மக்கள் உரம் இடும் நிலையில் இல்லை. ஒரு உரக்கப்பல் வந்தது. சமீபத்தில் நாங்கள் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு அதில் பாதியை தென்னை சாகுபடிக்கு வழங்க முடிவு செய்தோம்.
தற்போதைய தென்னை நெருக்கடிக்கு அடுத்த வருடத்திற்குள் தீர்வு காண முடியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.