யாழில் காற்றின் தரத்தை மதிப்பீடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு!
#SriLanka
#Jaffna
#air
Thamilini
11 months ago
யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள காற்றின் தரத்தை மதிப்பீடு செய்து அதன் முடிவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு உத்தரவிட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் (ஜனாதிபதி) நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் சசி மகேந்திரன் ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தொழில் ரீதியாக மருத்துவப் பயிற்சியாளரான டாக்டர் உமாசுகி நடராஜா தாக்கல் செய்த ரிட் மனுவை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாழ் குடாநாட்டில் காற்றின் தரம் தொடர்பில் அரச நிறுவனங்களால் முறையான விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என மனுதாரர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ரவீந்திரநாத் தாபரே நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.