இந்தியாவின் பாதுகாப்பிற்கு உறுதியளித்த ஜனாதிபதி : மோடிக்கும் அழைப்பு!
#India
#SriLanka
#AnuraKumaraDissanayake
Thamilini
11 months ago
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொள்ளும் கூட்டு செய்தியாளர் மாநாடு தற்போது ஆரம்பமாகியுள்ளது.
செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார, தனது இந்திய விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்த உதவும் என்று கூறினார்.
இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இந்தியப் பிரதமருக்கு அழைப்பு விடுத்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இலங்கைப் பிரதேசத்தை பயன்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் உறுதியளித்ததாக ஜனாதிபதி தெரிவித்தார்.