இலங்கையின் அபிவிருத்திக்கு தொழிநுட்ப மற்றும் நிதியுதவியை தொடர்ந்து வழங்க உறுதி!
#SriLanka
Dhushanthini K
8 months ago

இலங்கையின் அபிவிருத்திக்கு தொழிநுட்ப மற்றும் நிதியுதவி தொடர்ந்து வழங்கப்படும் என ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட இணைப்பாளர் Marc Andrefrench தெரிவித்துள்ளார்.
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸவை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நீண்ட காலமாக இந்த நாட்டு அரசாங்கத்துடனும் மக்களுடனும் இணைந்துள்ள பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்துவேன் எனவும், எதிர்காலத்திலும் அதனைத் தொடரப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு, கடந்த தேர்தலில் வழங்கப்பட்ட பாரிய ஆணையுடன் மக்களின் எதிர்பார்ப்புகளும் அதிகமாக இருப்பதால் எதிர்வரும் காலப்பகுதி சவாலானதாக அமையும் என ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட இணைப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.



