வங்கிகளில் பிக்சட் டெபாசிட் உள்ளவர்களும் சமூக நலன் பெறுவதாக தகவல்!

#SriLanka #Bank
Thamilini
11 months ago
வங்கிகளில் பிக்சட் டெபாசிட் உள்ளவர்களும் சமூக நலன் பெறுவதாக தகவல்!

வங்கிகளில் பிக்சட் டெபாசிட் உள்ளவர்களும் சமூக நலன் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக தென் மாகாணத்தில் உள்ள சில நிவாரணப் பயனாளிகள் நிவாரணத் தொகை பெறும் வங்கியிலேயே நிலையான வைப்புக் கணக்குகளை வைத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தென் மாகாண காணி ஆணையாளர் திரு.சேனக பள்ளிகுருகே இந்த உண்மைகளை தென் மாகாண மாத்தறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் வெளிப்படுத்தினார்.

வங்கி மேலாளர்களுக்கும், வங்கி அதிகாரிகளுக்கும் இதுதொடர்பான தகவல் தெரியும் எனவே இது தொடர்பான தகவல்களை பெற முடியும் என்று கூறியுள்ளார். 

 இது தொடர்பில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியிடம் கேட்ட கேள்வியில், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் உண்மைகள் வெளியாகியுள்ளதால் இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார். 

 அதற்காக அனைத்து பயனாளிகளின் தகவல்களையும் ஆய்வு செய்வோம் என்றார். மாத்தறை மாவட்டத்தில் சுமார் 53,000 காப்புறுதி பயனாளிகள் இருப்பதாகவும், அந்த அனைத்து பயனாளிகளின் புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் தொடர்பிலும் அறிக்கை பெறப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை