இலங்கையின் பல பிரதேங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
#SriLanka
#landslide
Dhushanthini K
8 months ago

பல மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு அமுலுக்கு வரும் வகையில் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கட்டம் 1 இன் கீழ், இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (15) மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பதுளை மாவட்டத்தின் எல்ல, பசறை, ஹாலிஎலல, ஹப்புத்தளை, கண்டி மாவட்டத்தின் மெததும்பர, கண்டி மாவட்டத்தின் பாததும்பர, குருநாகல் மாவட்டத்தின் ரிதிகம, அம்பங்கஹ கோரலய மற்றும் மாத்தளை மாவட்டத்தின் ரத்தோட்டை ஆகிய பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.



