இந்திய உயர்ஸ்தானிகர் பிரதமருடன் சந்திப்பு
#India
#SriLanka
Mayoorikka
8 months ago

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று வெள்ளிக்கிழமை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் மூலோபாய கூட்டாண்மையை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது.
தற்போது பல்வேறு அபிவிருத்தி நிலைகளில் உள்ள பல இருதரப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இந்த கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.



