நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு: திடீரென குறைந்த அரிசி விலை

#SriLanka #rice #prices
Mayoorikka
11 months ago
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு: திடீரென குறைந்த அரிசி விலை

நாடளாவிய ரீதியில் அரிசி தொடர்பான சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

 நேற்று (14) நாடளாவிய ரீதியில் சுமார் 75 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டதாக அதன் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.

 இனிவரும் காலங்களில் வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் சுற்றிவளைப்புக்களை நடத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

 மேலும், இறக்குமதி செய்யப்பட்ட அரிசி கையிருப்பு சந்தைக்கு வருவதால் அரிசியின் விலை குறைந்துள்ளதோடு, சில பிரதேசங்களில் நெல் விலையும் குறைவடைந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெறுவதாக அவர் தெரிவித்தார்.

 இதற்கிடையில், அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தினால் 5,200 மெற்றிக் தொன் நாட்டரிசியை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் முதல் தொகுதி இம்மாதம் 19ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை